கொழும்பு கிரேன்பாஸ் பகுதியில் வைத்து நேற்றைய தினம் திங்கட்கிழமை பல்வேறு குற்றச்செயல்களின் ஈடுபடுவதற்கு ஆயத்த நிலையிலிருந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை மற்றும் கொழும்பு 15 ஐ சேர்ந்த 30 மற்றும் 44 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 கூர்மையான வாள்கள், மற்றும் 15 ஆயிரம் லீற்றர் சட்டவிரோத மதுபானம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்