மாணவர்கள் இருவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த 16 வயதுடைய மாணவன் கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்