ஏத்கல கொஸ்கொல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வயோதிபர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை கொஸ்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையை செய்ததாக கூறப்படும் 69 வயதுடைய சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏத்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.