கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 12 ஐச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரட தெரிவித்தனர்.