தெனியாய – பல்லேகம பகுதியில் இன்று வியாழக்கிமை கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த கான்ஸ்டபிள் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் தெனியாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.