வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று முற்பகல் மதுபான விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
32 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியிருந்ததுடன் பின்னர் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.