மாத்தறை தொடங்கொட பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை கூரிய ஆயுதங்களால் குத்தி குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
37 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனினும் சந்தேகநபரைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.