பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக குவைத்தில் சிறைச்சாலையில் உள்ள 143 இலங்கையர்களில் 115 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மேலும், போதைப்பொருள் குற்றச்சாட்டில் 2019 ஆம் ஆண்டு ஒன்றரை கிலோ ஐஸ் மற்றும் 500 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டு குற்றவாளியாக இனம் காணப்பட்டு நேற்று முன்தினம் குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து 2016ஆம் ஆண்டு குவைத்தில் வீட்டு சாரதியாக வேலைக்குச் சென்றுள்ளதாகவும், அவரது கடைசி வேண்டுகோளுக்கு இணங்க அவரது சடலம் எப்பாவளையிலுள்ள அவரது தாயாரின் இல்லத்தில் ஒப்படைக்கப்படுவதாகவும் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.