கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுடன் தங்கியிருந்தவர்களின் தொலைபேசி மற்றும் பணம் திருடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பொது இடங்களில் தமது பிள்ளையை பயன்படுத்தி நீண்டகாலம் திருட்டில் ஈடுபட்டிருந்ததாகவும் குறித்த வைத்தியசாலையில், தனது பிள்ளையைப் பயன்படுத்தி பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை திருடியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.