திவுலபிட்டிய பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது குழந்தையின் வாயில் தீக்குச்சியை பற்றவைத்து எரித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
திவுலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய தாயொருவர் தனது மூன்று வயதுக் குழந்தை தூசன வார்த்தைகளை பேசியதால், அவற்றை நிறுத்தும்படி பயமுறுத்துவதற்காக, தீக்குச்சியைக் கொளுத்தி, தனது பிள்ளைவைத்த போயின் வாயில் நெருக்கமாக வைத்த போது குழந்தையின் மேல் உதடு எரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் 118 அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் திவுலப்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு குழந்தை தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்ததுள்ளதாக தெரிவித்த பொலிஸார் அந்தக்குழந்தையின் தாயை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.