டிக்கோயா- படல்கல தோட்டத்தில் கடந்த நேற்று வியாழக்கிழமை குளவி கொட்டுக்கு இலக்காகி கிளங்கன்-டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் இன்று வௌ்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
டிக்கோயா பகுதியை சேர்ந்த சதாசிவம் சிந்தை (வயது – 78) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
படல்கல தோட்டத்தில் நேற்றைய தினம் குளவி கொட்டுக்கு இலக்கான 14 வயது சிறுவன் உட்பட 06 ஆண்களும் பெண்ணொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் குறித்த பெண், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
குளவி கொட்டுக்கு உள்ளான ஏனைய 06 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.