குளியாப்பிட்டிய, இங்குருவத்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைக்கு அருகிலுள்ள மரமொன்றிலிருந்த குளவிக் கூட்டினை பருந்து தாக்கியதனால் கூட்டிலிருந்து கலைந்த குளவிகள் மாணவர்கள் மற்றும் பெற்றோரை கொட்டியுள்ளதுடன் தற்போது குறித்த குளவிக் கூட்டை அகற்றும் நடவடிக்கையில் குளியாபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.