-பதுளை நிருபர்-
லிந்துலை பேர்ஹாம் தோட்டத்தில் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து தோட்டத்தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேர்ஹாம் தோட்டத்தில் 10 ஆம் இலக்க தேயிலை மலையில் வேலை செய்து வந்த தருணம் எதிர்பாராத விதமாக கழுகு மரத்திலிருந்த குளவி கூட்டை தாக்கியதை தொடர்ந்து குளவிகள் கலைந்து அருகில் இருந்தவர்களை கொட்டியுள்ளது. மேலும், குளவி கொட்டுக்கு இலக்கான ஐவரும் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

