பொலன்னறுவை இங்குராகொடை பகுதியில் பாடசாலையொன்றில் 50 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இங்குராகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசலைக்கு அண்மையில் உள்ள மரத்திலிருந்த குளவிக் கூடொன்றை பருந்து தாக்கியதையடுத்து குளவிகள் மாணவர்களை கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.