கெக்கிராவ தெலம்பியகம குளத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் அரச முத்திரை பொறிக்கப்பட்ட 5,000 மருந்து குப்பிகளை சுகாதார பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
கெக்கிராவ பொது சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதே இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் இவை கைப்பற்றப்பட்டு 2 மணி நேரத்திற்குள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கு முன்னரும் குறித்த பிரதேசத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
