-யாழ் நிருபர்-
குருந்தூர் மலையில் சிவன் கோவில் கட்டுவது என்ற தீர்மானத்தை இந்து – பௌத்த மதத்தலைவர்கள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – ஆரியகுளம் நாக விகாரையில் பௌத்த பிக்குகள் மற்றும் சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், சைவக் குருமார்களும் இன்று வியாழக்கிழமை கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
காலை 10 மணிக்கு ஆரம்பமான இக்கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இடம்பெற்றது.
இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குருந்தூர் மலையில் சிவன் கோவில் கட்டுவது என இந்து – பௌத்த அமைப்புக்கள் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் குருந்தூர்மலை விகாராதிபதி, தையிட்டி திஷ்ஷ விகாரை விகாராதிபதி, நாவற்குழி சமத்தி சுமன விகாரை விகாராதிபதி, சிவசேனை அமைப்பு உட்பட சில சைவ அமைப்புக்கள், இந்துக்குருமார்கள் கலந்துகொண்டுள்ளனர்.