குருநாகல் மேயரின் வீடு தாக்கப்பட்டு தீ வைப்பு

குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீடு தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஆத்திரமடைந்த குருநாகல் மக்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் மேயரின் வீடு பலத்த சேதமடைந்தது. குருநாகல் போதனா வைத்தியசாலை, அரச வங்கிகள், குருநாகல் மாவட்ட செயலகம், மாகாண சபை உள்ளிட்ட நிறுவனங்களின் 4,000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை குருநாகல் “gota go gama” போராட்ட தளத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச அரசியல்வாதியான உதேனி அத்துகோரலவின் வீடு பிரதேச மக்களால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அவரது வீடும் பலத்த சேதமடைந்தது.

இதேவேளை, நாட்டின் பல நகரங்களில் அரசியல்வாதிகளின் கார்கள் பொதுமக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நிட்டம்புவ, கடவத்தை, மினுவாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் மற்றும் சொகுசு கார்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.