காலி, ஒரப்புவத்தை நகர மண்டப வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் இருந்து தேசிய அடையாள அட்டைகள், கடவுச் சீட்டுகள், சாரதி அனுமதி பத்திரங்கள் உட்பட்ட ஏராளமான ஆவணங்களுடன் கூடிய பணப் பைகள் நகர சபை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட சுத்திகரிப்பு பணிகளின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பண பைகளை திருடியவரகள் பணத்தை எடுத்துவிட்டு அவற்றை இவ்வாறு வீசிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.












