-யாழ் நிருபர்-
முச்சக்கர வண்டி விபத்துக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அமல்ராஜ் (வயது – 36) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 17ஆம் திகதி குறித்த நபர், அவரது தாய், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உறவினரின் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். இதன்போது செம்மணி சந்தி பகுதியில் நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.