பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அரலகங்வில பகுதியை சேர்ந்த அசோக வாசல குமாரி (வயது – 49) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.