மட்டு. களுதாவளை பகுதியில் குடிபோதையில் தந்தை தரும் தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தந்தையை மகள் கத்தியால் குத்தியதையடுத்து பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
களுதாவளையை பிரதேசத்தை சேர்ந்த க.பவகுணராசா (வயது – 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை தொடர்பில் மகள் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.