-யாழ் நிருபர்-
கீரிமலைப் பகுதியில் நேற்று புதன்கிழமை வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது.
கீரிமலை – புது கொலணி பகுதியில் உள்ள தனியார் காணொன்றில் குறித்த வெடி குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது. இந்நிலையில், தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த வெடிகுண்டை பாதுகாப்பாக மீட்டு சென்றுள்ளனர்.