-கிண்ணியா நிருபர்-
2025 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா நேற்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர அவர்களின் தலைமையில் கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெற்றது.
ஆகஸ்ட் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதுடன் அன்றே திறமையான இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
இவ் விழாவில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர்,கந்தளாய் பிரதேச சபைத் தலைவர் மற்றும் ஏராளமான அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


