கிழக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து செந்தில் தொண்டமானை நீக்கிவிட்டு ஆளுநராக வேறொருவரை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அவலுவலகத்திற்கு எமது செய்திச்சேவை தொடர்பு கொண்டு வினவிய போது.
அவ்வாறு எந்த உத்தியோகபூர்வ தகவல்களும் தங்களுக்கு கிடைக்கவில்லை என ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
செந்தில் தொண்டமான் கிழக்கில் ஆளுநராக நியமிக்கப்பட்ட போது சில தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தாலும் கூட பல்வேறு தரப்பினர் அவரது நியமனத்தை ஆதரித்தனர்.
கிழக்கு மாகாணத்திற்கு முதன்முறையாக ஒரு தமிழரை ஆளுநராக நியமித்ததை பலரும் வரவேற்றனர்.
கிழக்கிற்கு வந்த முதலாவது தமிழ் ஆளுநர் என்ற பெருமை செந்தில் தொண்டமானையே சாரும்.
எனினும் செந்தில் தொண்டமானின் ஆளுநர் நியமனம் குறித்து எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முக்கியமாக குறிப்பிடக் கூடியவர் முன்னாள் சுற்றாடல்துறை அமைபச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்
அவர் பொதுவெளியில் பகிரங்கமாக செந்தில் தொண்டமானை விமர்சித்து வந்தார்.
எனினும் செந்தில் தொண்டமான் ஆளுநராக பதவியேற்ற பின் கிழக்கு மாகாணத்தில் கிடப்பில் கிடந்த ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை துரித கதியில் செய்து முடித்தார்.
தன்மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை கண்டுகொள்ளாது அவர் கிழக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது செந்தில் தொண்டமானை ஊவா மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் முன்னாள் சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீட் அஹமட்டை ஆளுநராக நியமிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அவரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்தவற்கு மத அமைப்புகள் எதிர்ப்பை வெளியிடுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபாகரனை கிழக்கு ஆளுநராக நியமிக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அமைப்புகள் மற்றும் மத அமைப்புகள் அதற்கான கையொப்பங்களை திரட்டி வருவதாக தெரிய வருகின்றது.
மேலும் செந்தில் தொண்டமானை குறுகிய காலத்தில் ஆளுநர் பதவியிலிருந்து மாற்றுவதன் பின்னணி என்ன என்பது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடையே பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இருந்த போதிலும் கிழக்கின் புதிய ஆளுநராக யார் நியமிக்கப்பட போகிறார் என்பது தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றது.
கடந்த காலங்களில் கிழக்கின் ஆளுநராக அநுராதா யஹம்பத் இருந்த வேளையில் அவர் கிழக்கில் தமிழ் மக்களுக்கு சார்பாக எந்நவொரு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை அத்துடன் சிங்கள குடியேற்றங்களை கிழக்கில்கொண்டு வருவதற்கு முனைப்போடு இருந்தார் என்பது அவர் மீது இருக்கும் பகிரங்க குற்றச்சாட்டு.
அவரது போல் மட்டக்களப்பில் மூடப்பட்டிருந்த சிங்கள மகா வித்தியாலயம் அவரது பணி காலத்தில் தான் மீண்டும் திறப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு கிழக்கு மக்களிடையே ஆளுநர் குறித்து ஒரு வெறுப்பு நிலை காணப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒரு தமிழரான செந்தில் தொண்டமான கிழக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டமையானது கிழக்கு மாகாணத்தில் விமர்சனங்களுக்கு மத்தியிலும் வரவேற்பபை தான் பெற்றது என்று சொல்லலாம்.
எனினும் இப்போது கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா அடுத்த ஆளுநர் நியமனம் என்பதே கேள்வி?