நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11,241 குடும்பங்களைச் சேர்ந்த 38,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையினால், கிழக்கு மாகாணத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, கிழக்கு மாகாணத்தில் 9,965 குடும்பங்களைச் சேர்ந்த 33,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.