-திருகோணமலை நிருபர்-
கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 85 பேரில், 12 பெண்களை ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறும் 12 சிறார்களை விடுவிக்குமாறும் திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை குறித்த சந்தேக நபர்களை ஆஜர் படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடப்பரப்பில், மட்டக்களப்பு பகுதியில் அவுஸ்திரேலியா செல்வதற்காக சென்ற 85 பேரை கடற் படையினர் கைது செய்து நேற்று திங்கட்கிழமை திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய போது பெண்களை 175,000 ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறும், 12 சிறுவர்களையும் வழக்கிலிருந்து விடுவிக்குமாறும், 61 பேரை எதிர்வரும் 19ஆம் தேதி வரை விளக்கமறிவியலில் வைக்குமாறும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸ்ஸாக் கட்டளையிட்டார்.