கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் தலைவர்களை தெழிவூட்டும் சட்ட திறன் விருத்தி பயிற்சி மட்டக்களப்பு கல்லடி கிறீன் ஹாடன் தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வானது கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றதுடன் மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் முதல்வர்கள், தவிசாளர்கள், ஆணையாளர்கள, செயலாளர்கள் உட்பட பலர் கலநதுகொண்டனர்.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிதியுதவியில் நடைபெற்ற பயிற்சியின் பிரதான வளவாளராக காமினி குணரத்ன கலந்துகொண்டு தெழிவுபடுத்தினார்.
உள்ளூராட்சி மன்றங்களில் நிதி கையாளுகைஇ நிருவாக நடவடிக்கை, அனைவருக்கும் வாய்ப்பு வழங்கம் வகையில் உப குழுக்கள் அமைத்தல் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்தல் தொடர்பில் தெழிவுபடுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிபாளர் எம்.பி.எம்.புஹாரி – உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரதிநிதித்துவம் அற்றவர்களாக காணப்படுகின்ற ஓரங்கட்டப்பட்டுள்ள சிறுபாண்மைக்குழுக்களின் பிரதிநிதிகள்,
அதிலுங்குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளக ஆட்சிக்கான அரசியல் தளத்தில் வினைத்திறன் மிக்க வகையில் பங்குபற்றுவதற்குள்ள தனிப்பட்ட, சமூக சவால்கள் அல்லது தடைகள் மற்றும் அவர்களது தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சினைகள் ஆகியன அக்குழுக்களின் பிரதிநிதிகளாலேயே அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு,
எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளால் அவை எவ்வாறு களையப்படலாம் அல்லது குறைக்கப்படலாம் என்பது பற்றியும், இப்பிரச்சினைகளுக்கான நீடித்திருக்கக்கூடியதும் சாத்தியமானதுமான நேர்மறை தீர்வுகளுக்கான முயற்சிகளை உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் இக்குழுக்களையும் இணைத்துக்கொண்டு எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலின் முடிவில், கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் ஓரங்கட்டப்பட்ட சிறுபாண்மை குழுக்களின் பிரதிநிதிகளோடு இணைந்து தயாரித்த பரிந்துரைகளோடு கூடிய பரப்புரைப் பத்திரம் ஒன்றினை உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்களிடம் கையளித்ததோடு,
எதிர்காலங்களில் இக்குழுக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளது.

