கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட அறுவரின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் தோல்வியை அடுத்து ஆளுநர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க, தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளில் இருந்து விலகியவர்களாவர்.
