
கிழக்கு அவுஸ்திரேலியாவில் பெய்து வரும் தொடர் மழை : 9 வயது சிறுமி உட்பட 10 பேர் உயிரிழப்பு
கிழக்கு அவுஸ்திரேலியாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் 9 வயது சிறுமி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலைமையால் பெருமளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் ஏற்பட்டுள்ள தாக்கத்தினால் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு பணியகம், நிலவும் மழை நிலைமை சில நாட்களுக்கு தொடரும் என அறிவித்துள்ளது.
