கொழும்பு கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதியை நடத்தி வந்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 57 வயதுடைய ஆண் ஒருவரும், கிளிநொச்சி மற்றும் ரத்தொட பிரதேசங்களை சேர்ந்த 30 , 57 வயதுடைய இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.
கல்கிஸை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.