பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியில் வெற்றிவாகை சூடிய கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி மூலம் கில்மிஷாவை தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்ததோடு, இந்தியாவில் இருந்து நாடு திரும்பியதும் சந்தித்து வாழ்துத் தெரிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கில்மிஷாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சரிகமப நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற கில்மிஷா எதிர்வரும் 28 ஆம் திகதி இந்தியாவில் இருந்து யாழ். பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ளார்.வெற்றிவாகை சூடிய கில்மிஷா அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணம் அரியாலைக்கு வரும் வேளை ஊர்மக்கள் பெரும் வரவேற்பை வழங்க காத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.