கிரிபத்கொடை பகுதியில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி தொடர்பான விசாரணைகளையடுத்து, இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காதல் விவகாரமொன்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தாக்கப்பட்ட நபரும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் கிரிபத்கொடையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.