பேருவளை நகரின் மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த ஊழியர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஞசு குறியீட்டில் எரிபொருளைப் பெறச் சென்றபோது ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் பின்னரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.