முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் வீடொன்றின் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணைய் வெளியேறி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் கடந்த மழை வெள்ளத்தினால் கிணறு வெள்ளநீரில் நிரம்பிய நிலையில் கிணற்றினை சுத்தம் செய்வதற்காக இன்று ஞாயிற்று கிழமை கிணற்றினை நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு இறைத்துள்ளார்கள்.
இதன்போது கிணற்று நீருடன் மண்ணெண்ணை கலந்து கொண்டிருப்பது கண்டறியப்பபட்டுள்ளது. இது தொடர்பில் காணி உரிமையாளர் கூறிய போது 2012 ஆம் ஆண்டு மீள்குடியேறிய பின்னர் 23 அடி ஆழத்தில் குறித்த கிணறு தோண்டப்பட்டுள்ளது.
தற்போது கிணற்றினை சுத்தம் செய்யும் போது நீர் கருநிறத்தில் காணப்பட்டதோடு கிணற்று நீரில் மண்ணெண்ணைய் மணக்கத்தொடங்கியுள்ளது.
இது தொடர்பில் கிணற்றின் உரிமையாளரால் கிராமசேவகருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.