மல்வானே, வல்கம பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
திமாஷி ஜானித்மா மதுஷங்கா (வயது – 3) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
குறித்த சிறுமி தனது தாயுடன் வீட்டில் இருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பியகம சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஹர்ஷஜித் குணசேகரவினால் சம்பவம் நடந்த இடத்தில் மரண விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.