மாத்தறை கம்புறுபிட்டிய பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்து 5 வயது சிறுமி நேற்று புதன் கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
கம்புறுபிட்டிய பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுமி முன்பள்ளிக்குச் செல்வதற்காகக் குளித்துக் கொண்டிருந்தபோதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததுடன் சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காகக் கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.