கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 3,568 பரீட்சை மத்திய நிலையங்களுக்குமான வினாத்தாள்கள் விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பமாகியது.
நாளை முதல் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பரீட்சையில் 4,72,553 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இதில் பாடசாலை மூலம் 3,94,450 பேர் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.