பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பிற்பகல் வேளையில் காட்டு யானை அட்டகாசம் செய்வதால் பிரதேச மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மின்னேரிய நகர எல்லைக்குள் 3 காட்டு யானைகள் அத்துமீறி நுழைவதாகவும், மதிய நேரத்தில் பிரதான வீதியில் சுற்றித் திரிவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மித்ரிகிரி – பிசோபுரா கால்வாயில் காட்டு யானை ஒன்று வீழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
குறித்த பிரதேசத்தில் வழமையாக சுற்றித்திரியும் காட்டு யானைகள் கூட்டம் ஒன்று வருவதாகவும், அவற்றில் ஒன்று ஆபத்தில் சிக்கியிருக்கலாம் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இவ்வாறு கால்வாயில் விழுந்துள்ள யானையின் முதுகில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், யானை கால்வாயில் விழுந்தது குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும், பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.