
கால்வாயில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு
தம்புத்தேகம, மல்வனேகம பிரதேசத்தில் கால்வாயில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், உயிரிழந்தவர் தலாவ மல்வனேகம பகுதியைச் சேர்ந்த பி.பி. ஜினதாச (55 வயது) என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இது கொலையா அல்லது தவறுதலாக நீரில் மூழ்கியதால் இடம்பெற்ற உயிரிழப்பா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
.
