காலி பகுதியொன்றில்யில் காலை ஹெவ்லொக் வீதியில் உள்ள கால்வாயில் இருந்து நேற்று புதன் கிழமை பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.