-பதுளை நிருபர்-
பண்டாரவளை லியங்கஹவெல மகல்தெனிய பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மகல்தெனிய சந்திக்கு அருகில் உள்ள கால்வாயில் குழந்தையின் சடலம் கிடப்பதாக நேற்று பிற்பகல் 2 மணியளவில் லியங்கஹவெல பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிசுவின் சடலம் சிதைவடைந்து காணப்பட்டதால் வயதுஇ பாலினம் குறிப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிசுவின் தாய் தந்தை யார் என கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் ஆலோசனையின் பேரில், லியங்கஹவெல பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியின் தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.