கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் விருந்தகம் ஒன்றின் நான்காம் மாடியில் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.