காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் நேற்று புதன் கிழமை உயிரிழந்ததாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிறை வைக்கப்பட்ட கொட்டவகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைதி காய்ச்சல் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.