காலாவதியான வீசாவுடன் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 34 பாங்களாதேஷ் நாட்டு பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள விசேட புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீதுவை பகுதியில் வைத்து அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதான 19 முதல் 54 வயதுகளுக்கு இடைப்பட்ட 34 பேரும், வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்