கண்டி, மீமுரே – ஹுன்னஸ்கிரிய வீதியில் புஸ்ஸேஎல பிரதேசத்தில் நேற்று சனி கிழமை பிற்பகல் கார் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் ரஷ்ய இளைஞர் ஒருவரும் இலங்கைப் பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளதுடன் காரில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது 28 வயதுடைய ரஷ்ய இளைஞரும், 51 வயதுடைய இலங்கை பெண்ணுமே இவ்வாறு மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.