கொழும்பு ஒருகொடவத்தை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கார் ஒன்று பாதசாரி மீது மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெமட்டகொடை பிரதேசத்தில் இருந்து களனி பாலத்தை நோக்கி பயணித்த கார் குறித்த பாதசாரி மீது மோதியதில் காயமடைந்த பாதசாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைதுசெய்யப்பட்டதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒருகொடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.