கொழும்பில் பாதசாரி கடவையில் தனது மகளுடன் பயணித்த முன்பள்ளி ஆசிரியை கார் மோதியதில் உயிரிழந்துள்ளதுடன் மகள் காயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகஹவத்த மாவத்தை, பொல்கஸ்ஸோவிட்ட ஹல்பிட்ட பகுதியை சேர்ந்த முன்பள்ளி ஆசிரியையான புஷ்பிகா செவ்வந்தி நாகந்தல (வயது – 38) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவரது 12 வயது மகள் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்த முன்பள்ளி ஆசிரியை பிலியந்தலையில் இருந்து பேருந்தில் வந்து ஹல்பிட்ட பகுதியில் இறங்கி பாதசாரி கடவையை கடக்கும்போது கஹதுடுவவிலிருந்து கெஸ்பேவ நோக்கி சென்ற கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய கார் தப்பி சென்றுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.