கொழும்பு – பஞ்சிகாவத்தை பகுதியில் உள்ள பல கார் உதிரி பாகங்கள் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்சார கசிவே காரணம் என தெரியவந்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு கடையொன்றில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள ஏனைய கடைகளுக்கும் பரவியுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் 6 வாகனங்களைப் பயன்படுத்தினர்இ தீயினால் ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை.