-காரைதீவு நிருபர் சி்.கஜானன்-
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் மீண்டும் தொடர்மழை பெய்ய தொடங்கியுள்ளதால் வீதிகள் வெள்ளத்தில் நிறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரங்களில் பெய்து வந்த தொடர்மழையால் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி குளங்கள் நிரம்பியதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டார்கள்.
எனினும் கடந்த ஒருசில நாட்களாக மழை நிலைமை குறைவடைந்து இருந்தது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் மீண்டு தொடர்மழை ஆரம்பித்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




