டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளது.
தாவடியைச் சேர்ந்த மதுரன் கிருத்திஸ் என்ற பதினொரு மாத ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.